உலகில் உள்ளன பல நாடுகள்; அவற்றின் மானுட வளர்ச்சி என்று ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை அளந்து அதனை காலந்தோறும் வெளியிட்டு வருகிறது. சில நாடுகள் அதில் சிறந்தும், சில நாடுகள் இன்றியும் விளங்குகின்றன. இந்த வேற்றுமைக்கும் மொழி சார்ந்த செயல்பாடுகளுக்கும் உள்ள உறவை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

 

Graph of HDI variation across nations

Std

Variation

இந்த வேறுபாட்டுக்குக் காரணிகள் பல இருக்கலாம். நாம் சமூகத்தின் மொழி சார்ந்த செயல்பாடு என்ற ஒற்றைக் காரணி எவ்வளவு தாக்கத்தைச் செலுத்துகிறது என ஆய்வோம்.

 

மானுடரின் தோற்றமும் மொழியும்

விலங்கிடமிருந்து நம்மை விலக்கிக் காட்டுவனற்றுள் முதன்மையானது நாம் நினைத்ததை மொழிய இயன்றவர்கள் என்பது.

உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பரிணமிக்கின்றன; பொதுவாக எளியனவற்றிலிருந்து சிக்கலானவற்றுக்கு. பரிணாமத்தின் அடிப்படை – ஜீன்கள் இயற்கைத் தேர்வுக்குள்ளாவதாகும். பரிணாமச் செயல்பாட்டை பயனுள்ள தகவல் சேர்மானம் என்றும் காணலாம். அதாவது மூலத்தை விட,  பரிணமித்தது, அதிக பயனுள்ள தகவல்களை, தனது ஜீன் தொகுப்பில் கொண்டிருக்கும்.

க்ராப்

ஒரு உயிரினத்தில் இயற்கைத் தேர்வு நிகழ்வது என்பது அதன் உறுப்பினர்களில் தகுதியற்றன அடுத்த தலைமுறையை உருவாக்காது மடிவது; இதன் மூலம்  பயனுள்ள மாற்றங்கள் ஜீன் தொகுப்பில் தொடர்ந்து சேகரமாவது. ஆகவே ஜீன் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு பிட் தகவலும் பல வலிகளை விலையாகக் கொடுத்துப் பெறப்படுகிறது. இவ்வாறு பெறப்பட்டு ஜீனில் உள்ள தகவல்கள் ஒரு மானை சிங்கத்தைக் கண்டதும் ஓடவும், அதற்கு ஏதுவான கால்களை ஆக்கவுமாக அந்த உயிரினத்துக்குப் பயன்படுகின்றன.

இப்படித்தான் எல்லா உயிரினத்திலும் நடக்கிறது; மனிதனைத் தவிர.

(1) இன்று நீங்கள் சாலையில் நடந்து செல்கிறீர்கள். குழந்தைகள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பந்து உங்கள் முகத்தில் அடித்து விடுகிறது. நீங்கள் உணராமலே கண் தானாக மூடிக் கொண்டிருக்கும். இதனைச் செய்தது உங்களின் ஜீனில் உள்ள தகவல்கள். ஜீன் அளவில் நிகழ்ந்த அனுபவம் பயன்பட்டுள்ளது.

(2) நீங்கள் பிறந்த போது சைக்கிள் ஓட்டத் தெரியாது. குழந்தைப் பருவத்தில் கற்றீர்கள். பல நாட்களுக்குப் பிறகு இன்று சைக்கிளை ஓட்டுகிறீர்கள். நீங்கள் மறுபடியும் முதலிலிருந்து கற்பதில்லை. இங்கு ஒரு தனி நபரின் சொந்த அனுபவம் பயன்பட்டுள்ளது.

(3) ஒரு மலைப் பாதையில் பழங்குடியினர் நடந்து போகிறார்கள். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட பறவை குறிப்பிட்ட ஒலியை எழுப்பியவாறு பறக்கிறது. அது உயிரைப் பறிக்கும் விலங்கு இருப்பதன் அறிகுறி எனச் சொல்லி அந்தப் பழங்குடிக் கூட்டம் பின்வாங்கித் திரும்புகிறது. இங்கு கூட்டமாக அவர்கள் ஏதோ ஒரு தலைமுறையில் கற்ற அனுபவம் பயன்பட்டுள்ளது.

(4) நீங்கள் ஒரு சர்க்யூட்டை ஆக்குகிறீர்கள். இதற்கு மின்னழுத்தம், மின்னோட்டம் போன்ற அப்ஸ்ட்றாக்டான விசயங்களைப் பற்றி யோசிக்கிறீர்கள்; கணித மாதிரிகளைக் கொண்டு கணக்கிடுகிறீர்கள். இங்கு பயன்பட்டது இவை நீங்கள் சொந்த அனுபவத்தில் கண்ட தகவல்கள் அல்ல. (3) உடன் ஒப்பிடவும் இது வேறுபட்டது. எப்படி எனில் இவை ஒரு அனுபவம் மட்டுமல்ல; அனுபவம் அப்ஸ்ட்றாக்ட் விசயமாக ஆக்கப்பட்டு பயன்பட்டுள்ளது.

[[ டேபிள்:

>> (1) (2) (3) (4)

தாவரம்

விலங்குகள்

மனிதன்

]]

 

நினைப்பு, மொழி, இறை

 

Leave a comment