உயிரினங்களின் தோற்றம்

குறித்து

அல்லது

இயற்கைத் தேர்வின் காரணமாக தக்க இனங்கள் தழைத்தல்

அறிமுகம்

H.M.S. பீகிள் கப்பலில், ஒரு இயற்கையாளனாக, இருந்தபோது, தென் அமெரிக்காவில் இருக்கும் உயிர்களின் பரவல் குறித்தும், அந்தக் கண்டத்தில் தற்காலத்தில் வாழும் உயிரினங்கள் மறைந்த உயிரினங்களுக்குக் கொண்டிருக்கும் புவியியற் தொடர்புகள் குறித்தும்  சில உண்மைகளால் நான் தட்டப்பட்டேன். இந்த உண்மைகள், நமது தலைசிறந்த தத்துவஞானிகளுள் ஒருவரால் மர்மங்களின் மர்மம் என்று அழைக்கப்பட்ட, உயிரினங்களின் தோற்றம் பற்றிய புதிருக்கு, பின்வரும் அத்தியாயங்களில் காணப்படவிருக்குமாறு, கொஞ்சம் வெளிச்சம் தருகின்றன. 1837 இல், எனது வீட்டுக்குத் திரும்பிப் பயணித்தபோது, இந்தக் கேள்வியுடன் தொடர்பு இருக்க ஏதேனும் சாத்தியமுள்ள அனைத்து உண்மைகளையும் பொறுமையாகத் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் இது பற்றி ஏதாவது ( கண்டு ) அடையலாம் என்று எனக்குத் தோன்றியது. ஐந்தாண்டு (இதில்) பணியாற்றிய பின்னர் இந்த விடயத்தை ஆயவும், சில சிறு குறிப்புகளை வரையவும் செய்தேன்; இவற்றை 1844 இல், பின்னர் எனக்கு சரியானதுதான் என்று தோன்றிய, ஒரு துணிபுத்தொகுதியாக விரித்தேன்; அப்போதிருந்து இன்று வரை இந்த நோக்கத்தை அடைய நிதானமாகச் சென்று கொண்டிருக்கிறேன். நான் முடிவுக்குவருவதில் அவசரப்படவில்லை எனக் காட்டுவதற்காக, இவ்வாறு எனது தனிப்பட்ட விவரங்களுக்குள் நுழைவதற்காக நான் மன்னிக்கப்படலாம் என நம்புகிறேன்.

எனது பணி இப்பொழுது (1859) ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது; இதை முழுமையாக்க எனக்கு பல ஆண்டுகள் பிடிக்குமானாலும், எனது உடல் நலன் நன்றாக இல்லாததால், உடனடியாக இதை பதிக்குமாறு அவசரப்படுத்தப் பட்டேன். குறிப்பாக, இப்பொழுது மலேயத் தீவுக்கூட்டங்களின்  இயற்கை வரலாறை ஆராந்துவரும், திரு. வாலஸ், உயிரினங்களின் தோற்றம் பற்றி நான் வந்தடைந்த அதே துணிபுகளுக்குக் கிட்டத்தட்ட சரியாக வந்தடைந்திருப்பதால் இதை வேகமாகச் செய்ய வேண்டியவனாயிருக்கிறேன். 1858 இல், அவர் இதே விடயத்தில் ஒரு மெமோய்ரை, பின்னர் சர் சார்லஸ் லைலிடம் அளிக்கவும் என்ற வேண்டுகோளுடன், எனக்கு அனுப்ப, அதை சர் சார்லஸ் லைல் லினியான் குழுமத்துக்கு அனுப்ப, அது அக்குழும இதழின் மூன்றாவது தொகுதியில் பதிக்கப்பட்டது. எனது பணி பற்றி அறிந்திருந்த, சர் C. லைல், டாக்டர் ஹூக்கர் இருவரும் — பிந்தியவர் எனது 1844 வரைவைப் படித்திருந்தார் —  திரு.வாலலின் சிறப்புக்குரிய மெமொய்ருடனும், எனது சில மெனுஸ்கிரிப்டுகளின் சாரத்துடன் பதிப்பித்து வெளியிடுவது சிறந்தது எனக் கூறி என்னை பெருமைக்குள்ளாக்கினர்.

இப்போது நான் பதிப்பிக்கும் இந்நூல் அவசியமாகவே துல்லியமற்றது. நான் எனது பல கூற்றுகளுக்கு ரெஃபரன்ஸ்களோ, அத்தாரிட்டிகளோ அளிக்க இயலாது; எனது கூர்மையில் நம்பிக்கை செலுத்தும் வாசகனை நான் நம்பிக்கொள்ள வேண்டியதுதான். நான் எப்பொழுதும் நல்ல அத்தாரிட்டிகளை மட்டுமே நம்பவேண்டுமென எச்சரிக்கையுடன் இருந்தாலும், பிழைகள் இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனது துணிபுகளுக்கு அடிப்படையாக இருக்கும் உண்மைகளை விரிவாகவும், ரெஃபெரன்ஸ்களுடனும் இனி பதிப்பிக்க வேண்டியதன் தேவையை எவரையும் விட அதிகமாக நான் உணர்கிறேன்; இதனை வருங்காலப் பணியில் செய்வேனென நம்புகிறேன். இந்தத் தொகுதியில் சான்று தரமுடியாத, நான் வந்தடைந்துள்ள முடிபுகளுக்கு  பெரும்பாலும் நேர் எதிராகச் செல்லும் வண்ணமான, விசயங்கள் ஏதும் பேசப்படவில்லை என்பதை நன்கு அறிவேன்.  ஒவ்வொரு கேள்வியின் இருபுறத்து உண்மைகளையும், வாதங்களையும் முழுமையாகக் கூறுவதன் மற்றும் சமன்செய்வதன் மூலம் மட்டுமே ஏற்கத்தக்க முடிவை அடையமுடியும்; அது இங்கு சாத்தியமில்லை.

பற்பல இயற்கையாளர்களிடமிருந்து, சிலர் எனக்குத பெர்சனலாக$ தெரியாதவர்கள், பெற்ற உதவியைக் குறிப்பிடும் திருப்தியை இடமின்மை தடுப்பதற்காக வருந்துகிறேன். எனினும், அவரது அறிவுச் செழுமையாலும், சிறந்த பகுத்தறிவாலும், சாத்தியமான ஒவ்வொரு வழியிலும் எனக்கு உதவிய, Dr ஹூக்கர் -க்கு நான் கொண்ட கடனை தெரிவிக்காமல் இத்தருணத்தைக்கடக்க இயலாது.

உயிரினங்களின் தோற்றத்தைக் கருதுகையில், உயிரினங்களின் பரஸ்பர விருப்பு வெறுப்புகள், அவற்றின் கருவியல் தொடர்புகள், அவற்றின் புவியிடப்(geographical) பரவல், புவியியல்(geological) தொடர்ச்சி, மற்றும் பிற இத்தகைய விசயங்களைக் கண்ணுறும் ஒரு இயற்கையியலாளன், ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாகப் படைக்கபடவில்லை, ஆனால் அவை பிற உயிரினங்களிடமிருந்து, ஒரு வகை போல, வழித்தோன்றியிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவான். எனினும், இத்தகைய  முடிவு, இவ்வுலகில் உள்ள எண்ணிலா உயிரினங்கள் எவ்வாறு நாம் வியந்து ரசிக்கும் வண்ணம் மிகத்துல்லியமான உடலமைப்பும், கோ$- இயைபும் பெற மாற்றப்பட்டன என்பதைக் விளக்காத$/காட்டாத வரையில் ஏற்கத்தக்கதாகாது. வேறுபாட்டின் ஒரே சாத்தியமுள்ள காரணமாக பருவம்(climate), உணவு போன்ற புற நிலமைகளை இயற்கையிலாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பின்னர் நாம் காண இருக்குமாறு, ஒரு மிகக் குறுகிய அர்த்தத்தில் மட்டும் இது உண்மையாக இருந்தாலும் இருக்கலாம்; ஆனால், மரங்களின் பட்டைகளுக்குக் கீழ் உள்ள பூச்சிகளை பிடிக்க வியக்கும் வண்ணம்  குதிகால், வால், அலகு, நாக்கு இவை இயைபுற்ற(adapted) மரங்கொத்தி போன்றவற்றின் உடலமைப்புக்கு வெறுமே புற நிலமைகளை காரணமென்பது சரியாகாது. Misseltoe ஒட்டுண்ணியை எடுத்துக் கொள்ளுங்கள். அது குறிப்பிட்ட மரங்களிலிருந்து உணவைப் பெறுகிறது. அது சில பறவைகளால் கடத்தப்பட வேண்டிய விதைகளைக் கொண்டிருக்கிறது. அதன் ஆண்-பெண் பால் பூக்களைக் கொண்டுள்ளதால் பூச்சிகள் மகரந்தத்தைக் கடத்த வேண்டிய கட்டாயத்துடன் உள்ளது. இந்த ஒட்டுண்ணியின் உடலமைப்புக்குக் காரணமாக, அதன் பல்வேறு உயிரிகளுடனான உறவுகள்$relations/தொடர்புகள் உடன், புற நிலமைகளின் விளைவுகளை, அல்லது பழக்கத்தை$habit, அல்லது செடியின் விருப்பத்தையோ கூறுவது, முன்னர் கண்டதற்குச் சமமாக சரியானதாகாது.

‘படைப்பின் தடங்கள்’ (Vestiges of Creation)  இன் ஆசிரியர், சில குறிப்பிட்ட தலைமுறைகளுக்குப் பின்னர், ஏதோ ஒரு பறவை மரங்கொத்தியைப் பெற்றது, ஏதோ ஒரு தாவரம் Misseltoeவைப் பெற்றது, நாம் இன்று பார்ப்பதைப் போல இவை துல்லியமாக உருவாக்கப்பட்டன என்று கூறுவார் எனக் கொள்கிறேன்$presume; ஆனால்,உயிரிகளின் ஒன்றுக்கொன்றுடனும், அவற்றின் இயற்பியற் வாழ் நிலமைளுடனுமான கோ-இயைபை தொடாததாலும், விளக்காததாலும்,  இந்த $assumption எனக்கு  ஒரு விளக்கம் ஆகத் தெரியவில்லை.

ஆகவே, மாறுதல் மற்றும் கோ- இயைபு இவற்றின் காரணங்கள் குறித்து தெளிவான புரிதல் பெறுவது மிக முக்கியமானது. வீட்டு[வளர்ப்பு] விலங்குகளையும், பயிரிடப்படும் செடிகளையும் கவனத்துடன் ஆய்ந்தால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் சிறந்த வாய்ப்பைப் பெறுவது சாத்தியமாகும் என எனது $observationஇன் ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது. அந்த நினைப்பு என்னை ஏமாற்றிவிடவுமில்லை; வீட்டுவளர்ப்பின்போதான (domestication) மாறுபாடு குறித்த நமது அறிவு, என்னதான் துல்லியமற்றதாயினும், இப்புதிரை விடுவிக்கத் தக்க சிறந்த, பிரச்சினையற்ற துப்பாகும் எனக் கண்டேன். இது குறித்த ஆய்வுகள், என்னதான் இயற்கையியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டாலும், அவற்றின் பெருமதியை எடுத்துக் கூற வேண்டி இருக்கும்.

இத்தகைய புரிதலிலிருந்து, இந்நூலின் முதல் அத்தியாயத்தை வீட்டுவளர்ப்பின்போதான மாறுபாடு க்கு ஒதுக்குகிறேன். இவ்வாறாக நாம் , பெருமளவில் மரபு மாற்றம் முதலில் சாத்தியம்தான் என்றும், அதைப் போல அல்லது அதனினும் முக்கியமாக, அடுத்தடுத்து ஏற்படும் சிறு மாற்றங்களை தேர்வு செய்து தொகுப்பதால் மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் பெருமையையும் காண்போம். பின்னர் நான் உயிரினங்கள் இயல்பு நிலையில் அடையும் மாற்றங்கள் -ளுக்குள் நுழைவேன்; ஆனாலும், துரதிர்ஸ்டவசமாக, இவற்றை முழுமையாக விளக்க பெருமளவிளான தரவுகளைத் தரவேண்டி இருக்கும் என்பதால், மிகச்சுருக்கமாகவே நீண்ட நேரத்துக்கு பேச வேண்டி இருக்கும். எனினும், நாம் மாற்றங்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு தோதான சூழல் குறித்து பேசத் தக்கவர்களாவோம். அடுத்த அத்தியாயத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகுவதன் காரணமாக அவற்றுள் நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் எடுத்துக் கொள்ளப்படும். இது, விலங்கு மற்றும் தாவர ராஜ்ஜியங்களுக்கு, மால்தஸின்(Malthus) கொள்கையை பிரயோகிப்பதாகும். ஒவ்வொரு உயிரினத்திலும் வாழமுடிந்த அளவையும் தாண்டி ஆட்கள் பிறக்க, பிறக்க, வாழ வேண்டி போராடுவது மீண்டும், மீண்டும் அரங்கேறுகிறது; ஆகவே, எந்த ஒரு உயிரும், சிக்கலும் தொடர்மாற்றங்களும் கொண்ட வாழ்க்கைச்சூழலில், அதற்கு சாதகமாக கொஞ்சமே, கொஞ்சம் ஏதாவது ஒருவகையில் மாற்றம் கொண்டாலும் அது இயற்கையாக தேரும். தேர்ந்த எந்த ஒரு வகையும் அதன் புதிய மாறிய வடிவத்துடன் பெருகத் தொடங்கும்.

இந்த அடிப்படை இயற்கைத் தேர்வு கொள்கை கொஞ்சம் நீளமாகவே நான்காவது அத்தியாயத்தில் பேசப்படும்; அப்போது இயற்கைத் தேர்வு எவ்வாறு சிறப்பில்லாத உயிர் வடிவங்களை நீக்கி, யாது பண்பு விலகல் என நான் அழைப்பது -க்குக் கிட்டத்தட்ட முழுமையாகக் காரணமாகிறது என நாம் காண்போம். அடுத்த அத்தியாயத்தில் சிக்கலானதும், குறைவாகவே அறியப்பட்டதுமான மாற்றங்களின் விதிகளைப் பேசுவேன். அதற்கடுத்த ஐந்து அத்தியாயங்களில், இக்கொள்கையை ஏற்றுக் கொள்வதைக் கடினமாக்கும் விசயங்கள் பேசப்படும்; அவை, முதலில் மாறுவதிலுள்ள கடினங்கள், அதாவது எப்படி ஒரு எளிய உயிரோ உறுப்போ வளர்ந்த(developed) உயிரோகவோ,  சிறப்பாக உருவாக்கப்பட்ட உறுப்பாகவோ மாறமுடியும் என்பது; இரண்டாவதாக, Instinct, அல்லது விலங்குகளின் எண்ண ஆற்றல்; மூன்றாவதாக, கலப்பு(Hybridism), அல்லது உயிரிங்களின் மலட்டுத்தன்மையும், வேறுபாடுகள் கலக்கப்படும்போது செழிப்பு(fertile) ஆதலும்; நான்காவதாக, புவியியல் பதிவுகளின் துல்லியமின்மை. அடுத்த அத்தியாயத்தில் கால மாற்றத்தில் உயிர்கள் அடையும் புவியியல் தொடர்ச்சி குறித்து காண்பேன். பதிமூன்று, பதினான்கில், இட மாற்றத்தில் அவற்றின் புவியிடப் பரவலைக் காண்பேன்; பதினான்காவதில், உயிர்கள் பக்குவமடைந்த பின்னும், கருவாக இருக்கும்போதுமான வகைப் படுத்துதலும், பரஸ்பர ஈர்ப்புகளும். கடைசி அத்தியாயத்தில், மொத்தப் பணியும் நிறைவுரையுடன் சுருக்கமாகக் காணப்படும்.

உயிர்களினதும், வகைகளினதும் தோற்றம் பற்றி நிறைய விளக்கப்படாமல் போனது, நாம் நம்மைச்சுற்றியுள்ள உயிர்களின் பரஸ்பர உறவுகளை அறியாமல் தொடர்ந்து வரும் புறக்கணிப்பைக் கருதைகயில், ஆச்சர்யப்படத் தக்கதல்ல. ஏன் ஓர் உயிரினம் பரந்தும், மிகுந்தும் இருக்கிறது என்றும், இன்னொன்று அரிதாகவும், பரவாதும் இருக்கிறது என்றும் யார் சொல்வார்?  எனினும், இந்த உறவுகள்தான், உலகின் ஒவ்வொரு வசிப்பாளியின் தற்போதைய நன்மையையும், எதிர்கால வெற்றியையும், அடைய வேண்டிய மாற்றங்களையும், தீர்மானிக்கப் போகின்றன என்பதால் இக்கேள்விகள் முக்கியமாகின்றன. பலவும் மர்மமாக இருந்தாலும், ஒவ்வொரு உயிரினமும் தனித்தனியாக படைக்கப்பட்டது என்பது தவறு. ஒரு உயிரினத்தை இன்னொன்றாக உடனே மாற்ற முடியாது என முழுமையாக ஏற்கிறேன்; ஆனால், ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு, பெரும்பாலும் அழிந்துபோன, உயிரினத்தின் தொடர் வழித்தோன்றல்கள் என்கிறேன். மேலும், இயற்கைத் தேர்வே மிக முக்கியமான, ஆனால் அது மட்டுமேயல்லாத, மாற்றங்களின் காரணி என்கிறேன்.

Leave a comment